பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அமெரிக்க மில்லியனர் கைது

Report Print Vijay Amburore in அமெரிக்கா

மனைவியை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அமெரிக்க மில்லியனரை பொலிஸார் திங்கட்கிழமையன்று கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கியூ சூ (46) என்பவர் நிதி மற்றும் விவாகரத்து தொடர்பாக கடந்த 2012 அக்டோபர் மாதம் 10ம் திகதியன்று தன்னுடைய கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய தம்பதியினரின் குழந்தைகள் வீட்டில் இரத்தக்கறை இருப்பதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் 4 நாட்களுக்கு பிறகு கியூ சூ-வின் உடலை பொலிஸார் மெக்சிகோ எல்லையில் கண்டறிந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அவருடைய கணவர் பீட்டர் கைது செய்யப்பட்டு டிசம்பர் மாதம் 12ம் திகதி அன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அனுமதி இல்லாமல் எந்த நாடுகளுக்கும் செல்லக்கூடாது என அவருடைய இங்கிலாந்து மற்றும் அமெரிக்க பாஸ்போர்ட்டுகளை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு 2015ம் ஆண்டு விசாரணைக்கு வந்த போது பீட்டர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் அவரை தேட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் திங்கட்கிழமையன்று மெக்சிகோவில் வைத்து அவரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீது கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers