தாக்குதல்தாரியை தூண்டிவிட்டது டிரம்ப்..! எல் பாசோ துப்பாக்கிச் சூடு பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவின் எல் பாசோ நகரில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 3ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தின் எச் பாசோ நகரில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டான். இத்தாக்குதலில் ஈடுபட்ட 21 வயதான பேட்ரிக் க்ரூசஸ் என்ற இளைஞனை பொலிசார் கைது செய்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஏற்கனவே 20 பேர் உயிரிழந்த நிலையில், மூதாட்டியும், இளைஞனும் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. இதில் 1 ஜேர்மனியர், 8 மெக்சிகோ நாட்டவர், 13 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

தாக்குதல்தாரி பேட்ரிக் சமூகவலைதளத்தில் எழுதிய பதிவில் பெரும்பாலும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சொற்களே பிரதிபலித்ததாக சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டப்படுகிறது.

நாட்டில் டிரம்ப் தூண்டிவிட்ட வெறுப்புணர்வுதான் துப்பாக்கிச்சூட்டை சாத்தியமாக்கியதாக எல் பசோவின் 6 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தவரும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுபவருமான பெட்டோ ஓ ரூர்கே குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers