ஏலத்திற்கு வரும் இளவரசி மேகன் வசித்த வீடு

Report Print Vijay Amburore in அமெரிக்கா

பிரித்தானிய இளவரசி மேகன் தன்னுடைய முன்னாள் கணவருடன் வசித்த வீடு ஏலத்திற்கு வருகிறது.

அமெரிக்க நடிகையும், பிரித்தானிய இளவரசியுமான மேகன், இளவரசர் ஹரியை சந்திப்பதற்கு முன், ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ட்ரெவர் ஏங்கெல்சனை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நான்கு படுக்கையறை கொண்ட வீட்டில் 2011 முதல் 2013ம் ஆண்டு வரை இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

ட்ரெவர் ஏங்கெல்சனை பிரிந்த பின்னர் மேகன் கனடாவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டில் தனியாக வசித்தார்.

அதன்பிறகு 2017ம் ஆண்டு இளவரசர் ஹரியை திருமணம் செய்வதற்கு 6 மாதங்களுக்கு முன்பு அந்த வீட்டை 1.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்தார்.

இந்த நிலையில் மேகன் முதல் கணவருடன் வசித்து வந்த லாஸ் ஏஞ்சல்ஸ் வீடு 1.5 மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலத்திற்கு வர உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers