பரபரப்பை ஏற்படுத்தியுள்ள காஷ்மீர் விவகாரம்.. உன்னிப்பாக கவனித்து வருகிறோம்! அமெரிக்கா

Report Print Kabilan in அமெரிக்கா

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், காஷ்மீரின் தற்போதைய சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட விவகாரம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் ஜனாதிபதி டிரம்ப் நடுநிலையாக செயல்பட்டு, நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால், அதற்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக அமெரிக்க செய்தி தொடர்பாளர் மார்கன் ஆர்டகஸ் கூறுகையில்,

‘தற்போதைய சூழலில் அமைதி காக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஜம்மு-காஷ்மீர் விவகாரம் முற்றிலும் உள்நாட்டு சம்பந்தப்பட்டது என இந்தியா தெரிவித்திருப்பதை, அமெரிக்கா கவனத்தில் கொண்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்