இந்திய வம்சாவளியினர் நால்வரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்: நீதிமன்றத்தில் ஏற்பட்ட நிலை!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனது மனைவி மற்றும் அவரது உறவினர்கள் என நான்கு இந்திய வம்சாவளியினரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர், நீதிமன்றத்தில் மயங்கிச் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Westchesterஇல் உள்ள தனது வீட்டில், தனது மனைவி மற்றும் உறவினர்கள் இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக Gurpreet Singh (37) என்பவர் அவசர உதவியை அழைத்தார்.

பொலிசார் விரைந்துவந்தபோது, 18 குண்டுகள் சுடப்பட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் நால்வர் உயிரிழந்து கிடக்க, தகவல் அளித்த Gurpreet Singhஐக் காணவில்லை.

பின்னர் சிறிது நேரத்திற்குப்பின், சற்று தொலைவில் உள்ள ஒரு இடத்தில் Gurpreet Singh கைது செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்டவர்கள் Gurpreet Singhஇன் மனைவி Shalinder Kaur (39), Shalinderஇன் பெற்றோரான Hakikat Singh Panag (59), Paramjit Kaur(62) மற்றும் Gurpreet Singhஇன் அத்தையான Amarjit Kaur, (58) என்பது தெரியவந்தது.

இந்நிலையில் Gurpreet Singh நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை வாசித்த நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்கவும் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதைக் கேட்டதும் கண்கள் அகல விரிந்திருந்த நிலையிலேயே, அப்படியே மயங்கிச் சரிந்தார் Gurpreet Singh.

அதைக்கண்ட பொலிசார் இருவர், நிற்பதற்கு அவருக்கு உதவி செய்ததோடு, நாற்காலி ஒன்றில் அவரை அமரவும் வைத்தனர்.

இதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Gurpreet Singh மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுதம் கொண்டு தாக்கியது, இருவருக்கு மேற்பட்டவர்களை கொலை செய்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

ஆனால், இதுவரை Gurpreet Singh தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers