அழகை அதிகரிக்க மார்பக அறுவை சிகிச்சை செய்த பெண்... இன்று அவரின் நிலை என்ன தெரியுமா? ஆச்சரிய தகவல்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த மொடல் ஒரு மணி நேரத்திற்கு 10 டொலர் என்று சம்பாதித்து வந்த நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போடுவதன் மூலம் 4000 டொலர் சம்பாதித்து வருகிறார்.

தலைநகர் புளோரிடாவின் Miami-யில் வசித்து வருபவர் sabella Buscemi. 22 வயதான இவர், இப்போது சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில், ஏதேனும் புகைப்படம் பதிவிட வேண்டும் என்றால் 4000 டொலர் சம்பாதிக்கிறார்.

இன்ஸ்டாகிராம் ஸ்டார் மற்றும் மொடல் என்றழைக்கப்படும் இவர், தன்னுடைய ஆரம்பகாலக்கட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு 10 டொலர் என சம்பாதித்து வந்துள்ளார்.

அதன் பின்னர் தன்னுடைய உடல் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் அதற்கான முயற்சியில் இறங்கினார். மொடலில் அதிக ஆர்வம் கொண்ட இவர் அதற்காக சில அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டார்.

இதற்காக அவர் 8,200 டொலர் செலவு செய்தார். குறிப்பாக மூக்கிற்காக 3,500 டொலரும், மார்பகத்தை பெரிதாக்க வேண்டும் என்பதற்காக 4,700 டொலரும் செலவு செய்தார்.

அதன் பின் ஒரு மொடல், கல்லூரி மாணவி, இன்ஸ்டாகிராமில் வசிகரிக்கும் போஸ்டர்ஸ் என பதிவேற்றம் செய்த இவருக்கு, இன்ஸ்டாகிராமில் மட்டும் 1.7 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர்.

இதன் காரணமாகவே இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுடைய விளம்பரங்களை பதிவேற்றுவதற்காக சில நிறுவனங்கள் போட்டி போடுவதாகவும், அப்படி இவர் அவர்களுடன் பார்ட்னர்ஷிப் வைத்தால், ஒரு பதிவேற்றத்திற்கு 4000 டொலர் என வாங்குகிறார்.

அதே போன்று பிரபலமான இவருக்கு வெளியில் எங்காவது செல்ல வேண்டுமென்றால் இலவசமாக டிக்கெட் புக் செய்து தரப்படுகிறது, அதுமட்டுமின்றி Las Vegas, New York, Los Angeles, Ohio, Colombia மற்றும் Mykonos ஆகிய பகுதிகளில் இவர் தங்குவதற்கு சில ஹோட்டல்கள் இலவசமாக தங்க அனுமதி தருகின்றனர்.

இதைப் பற்றி அவரிடம் கேட்ட போது, நான் என்னிடம் மூன்று விஷயங்களை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன், அதை மாற்றிவிட்டேன், தற்போது செல்வாக்குமிக்கவராக இருப்பது மன ஆரோக்கியத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

இது எனது சுயமரியாதையை உயர்த்தியுள்ளது, மேலும் எனக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறி முடித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்