3 மாதங்களாக காணாமல் போன தாய்-மகள்: விசாரணையில் நடந்த எதிர்பாராத திருப்பம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் 4 வயது மகளை கடத்தி பாலியல் வியாபாரிகளிடம் விற்பனை செய்த தாயாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நான்கு வயதான ஆப்ரியானா ரெசினோஸ் என்கிற சிறுமி கடத்த மே மாதம் தன்னுடைய 23 வயதான தாயார் கார்மென் லோவை சந்திக்க சென்றுள்ளார்.

ஆனால் அன்று முதல் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவருடைய தந்தை ஜூலை 8 ஆம் திகதி அன்று பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இந்த நிலையில் 2ம் திகதியன்று கார்மென் உடைய செல்போன் மற்றும் டெபிட் கார்டு மூலம் அவருடைய இருப்பிடத்தை பொலிஸார் கண்டறிந்து கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மே மாதமே தன்னுடைய சொந்த மகளை கடத்தி பாலியல் தொழில் நடத்தும் வியாபாரிகளிடம் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து 100 மைல்கள் தொலைவில் இருந்த சிறுமியை பத்திரமாக மீட்டு அவருடைய தந்தையிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் சொந்த மகளை கடத்தி விற்பனை செய்ததற்காக அவருடைய தாயை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்