கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்த பெண்கள்.. திடீரென நேர்ந்த விபரீதம்!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க கடற்கரையில் கடல் அழகை ரசித்துக் கொண்டிருந்த மூன்று பெண்கள், பாறை உருண்டு விழுந்த விபத்தில் பலியான சம்பவம் நடந்துள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் அன்னே கிளாவ்(35). மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், அதற்காக தீவிர சிகிச்சை எடுத்த பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்.

இதனை கொண்டாடுவதற்காக, சாண்டியாக்கோ நகரில் உள்ள கிராண்ட் கடற்கரைக்கு அன்னே தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

அங்கு கடலின் அழகை ரசிப்பதற்காக, கரையோரத்தில் பாறைக்கு கீழ் குடைகளுடன் நாற்காலிகள் அமைக்கப்பட்டிருந்தன. அன்னே கிளாவ் மற்றும் அவரது குடும்பத்தினர் அதில் அமர்ந்து கடலின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக பாறை திடீரென உருண்டு வந்து அவர்களின் மீது விழுந்தது. இதில் அன்னேவும், அவரது தாய் மற்றும் உறவுப்பெண் ஒருவரும் சிக்கிக் கொண்டனர்.

இதனைக் கண்டவர்கள் அவர்களை உடனடியாக மீட்டனர். படுகாயமடைந்த அன்னே கிளாவ், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

அவரது தாயும், உறவுப்பெண்ணும் சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்