30 நொடி... தங்கச்சி உட்பட 9 பேரை சுட்டுக் கொன்ற தாக்குதல்தாரி: புகைப்படம் வெளியீடு

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்ட நபர், தனது சகோதரி உட்பட 9 பேரை சுட்டுக்கொன்றுள்ளார்.

அமெரிக்காவின் எல் பாசோவில் துப்பாக்கிச் சூடு நடந்த சில மணிநேரத்திற்குள் ஓஹியாவில் தாக்குதல் நடத்தப்பட்டு 9 பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல்தாரி மக்களை ஓட ஓட விரட்டி சுட்ட சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில இடம்பெற்ற தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஓஹியா தாக்குதலில் ஈடுபட்ட நபர் 24 வயதான ஓஹியோவின் பெல்ப்ரூக்கைச் சேர்ந்த 24 வயதான கானர் பெட்ஸ் என துப்பாக்கிதாரி அடையாளத்தை பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

தாக்குதலில் ஈடுபட்ட கானரின் சகோதரி 22 வயதான மேகன் பெட்ஸ் இறந்தவர்களில் ஒருவர் என தெரியவந்துள்ளது. கானர் இத்தாக்குதலில் ஈடுபட்டதற்கான நோக்கம் தற்போது வரை தெரியவில்லை.

அதேசமயம், இத்தாக்குதலுக்கு இனவெறி காரணமாக இருக்கக்கூடுமா என்ற கேள்விகளுக்கு பதிலளித்த பொலிஸ் அதிகாரி திரு பீல், இதுபோன்ற நோக்கம் இருந்ததாக பரிந்துரைக்கும் வகையில் எதுவும் இல்லை என்று கூறினார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்