பிறநாட்டினர் இங்கு குடியேறக்கூடாது! எனக்கு மரண தண்டனை.. தாக்குதல்தாரியின் அதிரவைக்கும் பதிவு

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தாக்குதல்தாரி தாக்குதலுக்கு முன்னர் எழுதியுள்ள பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்துக்குள், இயந்திரத் துப்பாக்கியுடன் நுழைந்த பேட்ரிக் க்ரூசிஸ் (24) என்ற இளைஞர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்தத் தாக்குதலில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு 26 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல்தாரியை பொலிசார் கைது செய்தனர்.

விசாரணையின் போது பேட்ரிக் சமூகவலைதளத்தில் எழுதிய பதிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கசப்பான உண்மை என எழுதப்பட்டுள்ள அப்பதிவு அரசியல் காரணம், பொருளாதார காரணம், தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி விவரம், தாக்குதலுக்கான காரணம், சொந்த காரணங்கள் ஆகிய 5 தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.

அதில், வருங்காலத்தில் ஜனநாயக கட்சி மட்டுமே அமெரிக்காவை ஆட்சி செய்ய வேண்டும். அமெரிக்காவில் குறைந்த அளவிலான வேலைவாய்ப்புகள் மட்டுமே உள்ளதாகப் பிற நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறுபவர்களை அனுமதிக்கக் கூடாது.

அமெரிக்கக் குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலம் வேண்டும் என்றால் இங்கு யாரும் குடிபெயரக்கூடாது.

ஏ.கே 47 துப்பாக்கி 100 சுற்றுகள் வரை சுட்டாலும் வெப்பம் அதிகமாகாது. அதனால் அதைப் பயன்படுத்தினேன். இந்தத் தாக்குதல் நடத்தும் போது என்னை யாரேனும் சுட்டால் மகிழ்ச்சி அடைவேன். ஒருவேளை நான் இறக்காமல் கைது செய்யப்பட்டால் நாடு முழுவதும் என்னைப் பற்றிப் பேசுவார்கள்.

பின்னர் கொடுமையான முறையில் எனக்கு மரண தண்டனை நிறைவேற்றுவார்கள்.

இதோடு என் குடும்பத்தினரை பற்றி எல்லோரும் மோசமாக பேசுவார்கள் என எழுதப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்