அமெரிக்க துப்பாக்கிச் சூடு; கேடயமாக மாறி தன் உயிரை கொடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய வீரத்தாய்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவின் எல் பாசோ நகரில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த தாக்குதலின் போது தாய் ஒருவர் தனது 2 மாத மகனைக் காப்பாற்றும் போது கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

25 வயதான ஜோர்டான் ஆஞ்சோண்டோ என்ற பெண்ணே இவ்வாறு உயிரை விட்டுள்ளார். எல் பாசோ நகரில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் நடத்திய சரமாரி தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தாக்குதலில் உயிரிழந்த ஜோர்டானின் சகோதரி 19 வயதான லெட்டா ஜாம்ரோவ்ஸ்கி கூறியதாவது, ஜோர்டன் பள்ளிக்கு தேவையான பொருட்கள் வாங்க சென்ற போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

தாக்குதலில் உயிர்பிழைத்த அக்காவின் 2 மாத குழந்தை எழும்பு முறிவு பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தையை பாதுகாக்க ஜோர்டன் அவர் மீது விழுந்ததால் எழும்பு முறிவு எற்பட்டது.

ஜோர்டன் தோட்டாவால் தாக்கப்பட்ட போது அவர் கையில் குழந்தை இருந்துள்ளது, குழந்தையை காப்பாற்ற பாதுகாப்பு கவசமாக குழந்தை மீது விழுந்து பாதுகாத்துள்ளார். தன் உயிரை கொடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளார் ஜோர்டன்.

அக்கா சுட்டுக்கொல்லப்பட்டு, குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், எல் பாசோ தாக்குதலை அடுத்து தனது அக்கா கணவர் ஆண்ட்ரே ஆஞ்சோண்டோ காணாமல் போனதாகவும், தற்போது வரை அவரை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என லெட்டா ஜாம்ரோவ்ஸ்கி துக்கமடைந்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்