தம்மை துஸ்பிரயோகம் செய்தவருக்கு பிணையா? இந்திய நீதித் துறையை கிழித்து தொங்கவிட்ட வெளிநாட்டுப் பெண்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

இந்தியாவில் சுற்றுலா சென்ற போது தம்மை துஸ்பிரயோகம் செய்தவருக்கு தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளது முறைகேடானது என பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண் கொந்தளித்துள்ளார்.

இது இந்திய நீதித் துறையில் எவ்வளவு ஊழல் மலிந்துள்ளது என்பதை அம்பலப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலின சமத்துவம் மற்றும் மனித உரிமை ஆர்வலருமான ஜெனிபா-லாரன் நீல்சன் என்ற பெண்மணி, கடந்த ஜூலை 30 ஆம் திகதி பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதில் கீழமை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை தண்டனையை இடை நீக்கம் செய்யப்பட்டது குறித்தும், பிணை வழங்கப்பட்டது தொடர்பிலும் டெல்லி உயர் நீதிமன்றம் மீது அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

குறித்த தகவலால் உடைந்துபோன ஜெனிபா உடனடியாக சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகம் சென்று முறையிட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் இந்த விவகாரம் தொடர்பில் கைவிரித்த பின்னரே ஜெனிபா அந்த காணொளியை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

துஸ்பிரயோக வழக்கில் 7 ஆண்டுகள் தண்டிக்கப்பட்ட குற்றவாளிக்கு ஊழலில் மலிந்த ஒரு நீதிபதியால் பிணை வழங்கப்பட்டுள்ளது உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ள ஜெனிபா,

இந்த விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஊழல் மலிந்த இந்தியாவில் பெண்களுக்கு ஆதரவாக செயல்பட எவரும் முன்வருவதில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இருப்பினும், பெண்களுக்கு எதிராக நடந்தேறும் குற்றங்களை அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என கூறுவது நகைப்புக்கு உரியது என ஏளனம் செய்துள்ளார்.

டெல்லியில் குடியிருக்கும் ராஜீவ் பன்வார் என்பவரது குடியிருப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு கணவருடன் வாடகைக்கு குடியிருந்த ஜெனிபாவை ராஜீவ் பன்வார் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்த வழக்கில் அதே ஆண்டு ராஜீவ் பன்வார் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடிபெற்ற விசாரணையின் இறுதியில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பன்வார் மேல்முறையீடு செய்ததை அடுத்து அவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பிணை அளித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்