சில மணிநேரத்திற்குள் அமெரிக்காவில் மீண்டும் கொலைவெறி தாக்குதல்.. 9 பேர் பலி: பீதியில் மக்கள்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்சாஸின் எல் பாசோவில் துப்பாக்கிச் சூடு நடந்த சில மணி நேரங்களுக்குள் நாட்டில் இரண்டாவது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓஹியோ மாகாணத்தின் டேட்டனில் இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்ததாகவும், இதில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தாக்குதல் குறித்த தகவலறிந்த பொலிஸாரும் அவசரகால பணியாளர்களும் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். தாக்குதல்தாரி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவயிடத்தில் இருந்த நபர் ஒருவர் கூறியதாவது, டப்ளின் பப்பில் உள்ள பாரில் துப்பாக்கி ஏந்திய தாக்குதல்தாரி தாக்குதலில் ஈடுபட்டார். அவரிடம் ஏஆர்15 ரக துப்பாக்கி இருந்தது.

நானும் என் நண்பனும் எப்படியோ தப்பித்து விட்டோம். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் மனம் உடைந்து வருத்தப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

சில மணிநேரங்களுக்கு முன் எல் பாசோவில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல்தாரியை பொலிசார் கைது செய்துள்ளனர். தற்போது, மீண்டும் ஓஹியோவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அமெரிக்கா மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்