வணிக வளாகத்தில் நடந்த கொலைவெறி தாக்குதல்.. கோழைத்தனமான செயல்! கொந்தளித்த டிரம்ப்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவின் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகவும் கோழைத்தனமான செயல் என ஜனாதிபதி டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வால்மார்ட் ஷாப்பிங் மாலில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை மடக்கிப் பிடித்த பொலிசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இச்சம்பவம் கோழைத்தனமான செயல் என ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் டிரம்ப் கூறுகையில், ‘டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு துயரமானது. இது மிகவும் கோழைத்தனமான செயல்.

இன்று நடந்த இந்த வெறுக்கத்தக்க செயலை கண்டிப்பதுடன், நாட்டில் உள்ள ஒவ்வொருக்காகவும் நான் துணை நிற்கிறேன். அப்பாவி மக்களை கொல்வதை நியாயப்படுத்தும் எந்த காரணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது ’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்