சரமாரி துப்பாக்கிச் சூடு... மேசையின் கீழ் மறைந்திருக்கும் நபர்.. மக்கள் கதறும் சத்தம்: திகிலூட்டும் வீடியோ

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவின் எல் பாசோ நகரில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் பலரை சுட்டுக்கொல்லும் போது, ஒருவர் மேசையின் கீழ் மறைந்திருக்கும் திகிலூட்டும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

இத்தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒரு சந்தேக நபர் இப்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர் 21 வயதான Patrick Crusius என தெரியவந்துள்ளது.

குறித்த வீடியோவில், கடைக்குள் துப்பாக்கிச் சூடு நடக்கும் போது நபர் மேசையின் கீழ் மறைந்திருக்கும் காட்சிகள் இப்போது சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இதன்போது, பின்னால் மக்கள் கதறிக் கொண்டு ஓடும் சத்தம் கேட்கிறது.

குறித்த வீடியோவை எடுத்த நபரும் மேசையின் கீழ் மறைந்திருந்துள்ளார். ஆனால், தாக்குதல்தாரி இவருக்கு அருகில் இருந்தாரா என்பது தெரியவில்லை.

டெக்சாஸின் எல் பாசோவில் இன்றைய தாக்குதல் சோகமானது மட்டுமல்ல, அது கோழைத்தனமான செயலாகும். இன்றைய வெறுக்கத்தக்க செயலைக் கண்டிக்க இந்த நாட்டில் உள்ள அனைவருடனும் நான் நிற்கிறேன் என்பது எனக்குத் தெரியும். அப்பாவி மக்களைக் கொல்வதை நியாயப்படுத்தும் எந்த காரணங்களும் சாக்குகளும் இருக்க முடியாது.

மெலனியாவும் நானும் எங்கள் இதயப்பூர்வமான எண்ணங்களையும் பிரார்த்தனைகளையும் டெக்சாஸின் மக்களுக்கு செலுத்துகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்