வணிக வளாகத்தில் புகுந்து கொலைவெறி தாக்குதல் முன்னெடுத்த இளைஞரின் பெயர், புகைப்படம் வெளியானது!

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றில் புகுந்து துப்பாக்கியால் கொலைவெறி தாக்குதல் நடத்திய இளைஞரின் புகைப்படம் வெளியானது.

டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரிலேயே இக் கொடூர சம்பவம் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமையன்று நடந்தேறியது.

சம்பவப்பகுதியில் வைத்தே அதிரடிப்படையினர் குறித்த இளைஞரை மடக்கிப் பிடித்துள்ளனர். அவரது வயது 21 இருக்கலாம் என அப்போது பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் சுமார் 20 அப்பாவி மக்கள் வரை கொல்லப்பட்டதாகவும் 40-கும் மேற்பட்டவர்கள் காயங்கலுடன் தப்பியதாக அஞ்சப்படும் இந்த கொடூர சம்பவத்தை முன்னெடுத்தவர் பேட்ரிக் க்ரூசியஸ் என்ற இளைஞர் என தகவல் வெளியாகியுள்ளது.

மெக்ஸிக்கோ நாட்டு எல்லையில் அமைந்த எல் பாசோ நகரில் செயல்பட்டுவரும் வால்மார்ட் வணிக வளாகத்தில் புகுந்தே கொலைவெறி தாக்குதலை முன்னெடுத்துள்ளார் க்ரூசியஸ்.

தாக்குதலுக்கு முன்னர் 4 பக்க அறிக்கை ஒன்றையும் இவர் இணையத்தில் வெளியிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

அந்த அறிக்கையில் ஸ்பானிய மொழி பேசும் லத்தீன் அமெரிக்க மக்கள் டெக்சாசில் அதிக அலவில் குடியேறியுள்ளதற்கு அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், நியூசிலாந்தின் Christchurch மசூதி தாக்குதல் திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு எல் பாசோ வணிக வளாகத்திலும் அவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

Christchurch மசூதி தாக்குதலில் கொத்தாக 50 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இணைப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20 பேர் வரை கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் எல் பாசோ நகரில் அமைந்துள்ள வால்மார்ட் வணிக வளாகத்திலேயே மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதில் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் ஈடுபட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது. ஆனால் அதில் எத்தனை பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் என பொலிசார் உறுதி செய்யவில்லை.

கைதான நபர் 21 வயது இளைஞர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது பெயர் விவரங்களை வெளியிட மறுத்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியை பொலிசார் சுற்றி வளைத்துள்ளனர். தற்போது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என கூறும் பொலிசார்,

அந்த பகுதியில் வேறு துப்பாக்கி தாரிகள் எவரும் இல்லை என்பதையும் உறுதி செய்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்