தற்காப்புக்காக துப்பாக்கியை எடுத்த பொலிஸ்: பரிதாபமாக பலியான அப்பாவி பெண்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

தன்னை தாக்க முயன்ற நாயிடம் இருந்து தப்ப முயன்ற பொலிஸார், தவறுதலாக நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கட்டுப்பாடற்ற நாய்க்கு அருகில் புல் மீது ஒரு பெண் கிடந்ததாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் ரோந்து பணியில் இருந்த பொலிஸார் ஒருவர் பெண்ணை சரிபார்க்க அனுப்பப்பட்டார்.

பெண்ணை சந்தித்த அதிகாரி, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த பெண், ஆம் என பதிலளித்தார்.

இந்த நாய் உங்களுடையதா? தயவு செய்து அவனை அழைத்துக்கொள்ளுங்கள் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்தார்.

வீடியோவை காண...

ஆனால் அதற்குள் அந்த நாய் வேகமாக குறைந்துகொண்டே முன்னேறியது. இதனால் பதறிப்போன அந்த அதிகாரி தன்னுடைய துப்பாக்கியை எடுத்து மூன்றுமுறை நாயை நோக்கி சுட்டார். இதில் தவறுதலாக ஒரு குண்டு அந்த பெண்ணின் நெஞ்சுப்பகுதியில் பாய்ந்தது.

அந்த பெண் சரிந்து தரையில் விழுவதை பார்த்த அதிகாரி, உடனடியாக ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உயரதிகாரி ஒருவர் கூறுகையில், இறந்த பெண் மார்கரிட்டா ப்ரூக்ஸ் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட பொலிஸார் 25 வயதான ஆசிய அமெரிக்கர். அவர் பணியில் சேர்ந்து ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நாய்க்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்திற்காக நாங்கள் தான் முழுப்பொறுப்பு. எங்களுடைய ஆழ்ந்த வருத்தத்தை ப்ரூக்ஸ் குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்கிறோம். இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்