கோடிக்கணக்கில் பரிசு விழுந்த லொட்டரி டிக்கெட்டை குப்பையில் வீச சென்ற விமானி.. பின்னர் என்ன ஆனது தெரியுமா?

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் 94 வயதான முன்னாள் விமானப்படை விமானிக்கு லொட்டரியில் $6.5 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

வில்லியன் பவுக்கர் (94) என்ற முதியவர் விமானப்படையில் முன்னர் விமானியாக பணியாற்றியவர் ஆவார்.

லொட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் கொண்ட வில்லியமுக்கு இதுவரை பெரியளவில் பரிசுகள் ஏதும் விழவில்லை.

இந்நிலையில் சமீபத்திலுல் Megabucks லொட்டரி டிக்கெட்களை அவர் வாங்கினார். இதையடுத்து வில்லியம் வீட்டுக்கு வந்த அவர் பேத்தி அந்த லொட்டரி டிக்கெட்களை வாங்கி பார்த்தார்.

ஆனால் Megabucks டிக்கெட்டுக்கு பதிலாக அதை Mega Millions லொட்டரி டிக்கெட் என தவறாக எண்னிய பேத்தி வில்லியமுக்கு பரிசு விழவில்லை என கூறினார்.

இதையடுத்து டிக்கெட்டை குப்பையில் போட சென்ற வில்லியமுக்கு எதற்கும் ஒருமுறை லொட்டரி டிக்கெட்டை மீண்டும் பார்க்க தோன்றிய நிலையில் அவருக்கு பம்பர் பரிசாக $6.5 மில்லியன் விழுந்தது தெரியவந்தது.

இதையடுத்து மகிழ்ச்சியில் திளைத்துள்ள வில்லியம் கூறுகையில், இந்த வயதில் இப்படியொரு அதிர்ஷ்டம் அடிக்கும் என நினைத்து கூட பார்க்கவில்லை.

என் குடும்பத்தினருக்கு இந்த பரிசு தொகையை பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளேன், இது குறித்து அவர்களிடம் பேசி வருகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்