நீதிபதி ஒருவர் நீதிமன்றத்தில் சந்தித்த அவமானம்: தரதரவென இழுத்துச் செல்லப்பட்டதன் பின்னணி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனது பதவியைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக தனது சகோதரனுக்கு உதவிய ஒரு நீதிபதி, கைது செய்யப்பட்டு, தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட பரிதாபம் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் நடந்தேறியது.

நான்கு ஆண்டுகள் நீதிபதியாக இருந்த Tracie Hunter என்பவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Tracieயின் சகோதரர் சிறார் சீர்திருத்தப் பள்ளி ஒன்றில் பணிபுரியும்போது, ஒரு சிறுவனை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டதால், அவர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.

c

அந்த நேரத்தில் சட்ட விரோதமாக ரகசிய ஆவணங்களை தனது சகோதரருக்கு Tracie கொடுத்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டது.

தனது பதவியை பயன்படுத்தி, தனது சகோதர் அவரது வேலையை தக்க வைத்துக் கொள்ள Tracie உதவியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், Tracie பல மேல் முறையீடு கோரியும் பலனொன்றுமில்லை.

அவரை தண்டிக்கக்கூடாது என கூறி ஏராளமான கடிதங்கள் நீதித்துறைக்கு அனுப்பப்பட்டன.

என்றாலும்,நேற்று Tracieக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தீர்ப்பைக் கேட்டதும் எழுந்து தன்னை அதிகாரிகளிடம் ஒப்படைத்த Tracie, திடீரென அதிர்ச்சியில் உறைந்தார்.

அவரது கண்கள் திறந்த வண்ணம் இருக்க, கால்களும் ஒத்துழைக்காத நிலையில், ஒரு பொலிஸ் அதிகாரி அவரை தரதரவென இழுத்துச் சென்றதைக் கண்டு நீதிமன்றமே அலறியது. அங்கு கூடியிருந்த மக்கள் அவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பிய நிலையில், ஒரு பெண், பொலிசார் Tracieயை கைது செய்வதை தடுக்க முயன்றதால், அவரும் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துவரும் Tracie, அவை அரசியல் உள் நோக்கம் கொண்டவை என்று கூறிவருகிறார்.

Tracie, Hamilton சிறார் நீதிமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்க நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்