டிரம்பின் திடீர் கேள்வியால் திகைத்து நின்ற நோபல் பரிசு பெற்ற பெண்!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் நோபல் பரிசு பெற்ற யாஸிடி இன பெண்களுக்கான செயற்பாட்டாளரிடம், ஜனாதிபதி டிரம்ப் கேள்வி கேட்டு திகைப்பில் ஆழ்த்தினார்.

யாஸிடி இன பெண்களுக்கான செயற்பாட்டாளர் நாடியா முரத், கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். இந்நிலையில், மதச் சுதந்திரம் எனும் பெயரில் 3 நாட்கள் மாநாடு அமெரிக்காவில் நடந்தது.

இதில், ஜனாதிபதி டிரம்பை போரினால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். அப்போது நோபல் பரிசு பெற்ற நாடியாவும் அங்கு இருந்தார். அவர் பேசியபோது,

தனது குடும்பத்தில் தாயும், 6 சகோதரர்களும் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாகவும், யாஸிடி இனப் பெண்கள் கொடூரமாக பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது, ஜனாதிபதி டிரம்ப் எதற்காக உங்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்று நாடியாவிடம் கேள்வி எழுப்பினார். இதனால் சற்று திகைத்து நின்ற அவர், பெண் புலம்பெயர்ந்தவர்களின் மறுவாழ்வுக்காக தாம் போராடியதாக தெரிவித்தார்.

Jacques Witt / Pool / Bestimage

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்