அமெரிக்காவில் வரலாறு காணாத புயல்மழை: தத்தளித்த வெள்ளை மாளிகை

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்றைக்கு முன்தினம் ஒரு மாதத்திற்கு பெய்ய வேண்டிய மழை ஒரு மணி நேரத்தில் பெய்ததால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

வாஷிங்டன், மேரிலேண்ட், விர்ஜினியா மாகணங்களில் திங்கட்கிழமையன்று புயலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

சுமார் ஒரு மணிநேரம் பெய்த மழையால் 4 அடி அளவுக்கு வெள்ளம் தேங்கியிருந்தது. இதனால் நகரங்களின் பல பகுதிகளிலும் நீர் தேங்கி, கார்கள் அடித்து செல்லப்பட்டன.

மழை நீர் வெளியில் செல்வதற்கான வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.

இந்த கனமழையானது வெள்ளை மாளிகையையும் விட்டுவைக்கவில்லை. அதன் அடித்தளத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களின் அறைக்குள்ளும் வெள்ள நீர் புகுந்ததாக வாஷிங்க்டன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்