வாடகை காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட தாயாரும் 3 பிள்ளைகளும்: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாடகை கார் ஒன்றில் தாயார் மற்றும் 3 பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க்கின் பெர்வின் அவென்யூ பகுதியிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜான் கிரேன் என்பவர் குறித்த காரை அப்புறப்படுத்த முயற்சிக்கையில் இச்சம்பவத்தை பார்த்துள்ளார்.

ஆனால், அச்சம்பவம் மிகவும் கொடுமை என ஜான் கிரேன் தெரிவித்துள்ளார்.

இதில், சடலமாக மீட்கப்பட்டவர் 35 வயதான கிரிஸ்டல் டெனிஸ் சாவேஜ் என தெரியவந்துள்ளது. மேலும், குறிப்பு ஒன்றும் அந்த காரில் இருந்து பொலிசார் மீட்டுள்ளனர்.

இந்த தகவல் அறிந்த கிரிஸ்டலின் கணவர், மிகவும் வருத்தமுடன் பேஸ்புக் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு கிரிஸ்டல் விவாகரத்து பெற்றுள்ளார்.

தமது கணவர் கொடுமைப்படுத்துவதாக கூறியே விவாகரத்தும் பெற்றுள்ளார். தற்போது தமது 3 பிள்ளைகளுடன் அவர் தற்கொலை செய்து கொண்டதன் காரணம் என்ன என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்