விமான நிலைய கட்டிடத்தில் பயங்கரமாக மோதிய விமானம்: 10 பேர் சம்பவயிடத்தில் பலி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் விமானங்கள் பாதுகாப்பாக நிறுத்தப்படும் கொட்டகை மீது குட்டி விமானம் ஒன்று பயங்கரமாக மோதியதில் 10 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளனர்.

டெக்சாஸின் டல்லாஸுக்கு அருகிலுள்ள அடிசன் விமான நிலையத்திலேயே இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. மோதிய வேகத்தில் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதில், பயணம் செய்த அனைவரும் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான விபத்தை அடுத்து வெளியான காணொளி காட்சிகளில்,

சம்பவம் நடந்த பகுதியில் இருந்து கரும்புகை பீறிட்டு கிளம்புகிறது. விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்படும் கொட்டகையில் இருந்து விமானி உள்ளிட்ட 10 பேருடன் புறப்படத் தயாரியுள்ளது.

ஆனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சில நிமிடங்களிலேயே மோதி விபத்துக்குள்ளானது. தீப்பற்றி எரிந்ததால் மொத்த விமானமும் சேதமடைந்துள்ளது.

சுமார் 10-கும் மேற்பட்டவர்கள் இணைந்து போராடிய பின்னரே நெருப்பு கட்டுக்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பலியானவர்கள் தொடர்பான தகவல் ஏதும் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை, ஆனால் அவர்களது குடும்பத்தாருக்கு தகவல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்