பசியால் கதறிய பறவைக்குஞ்சு... தாய் பறவையின் செயல்: நெஞ்ச்சைப் பிசையும் புகைப்படம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

பசியால் கதறும் பறவைக்குஞ்சு ஒன்றிற்கு தாய் பறவை உணவாக சிகரெட் துண்டு ஒன்றை ஊட்டும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்கரையில் இருந்து அந்த புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது, கடற்கரைகள் எவ்வளவு மாசுபாடு நிறைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதாக ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தாய் பறவை ஒன்று தமது குஞ்சுப்பறவைக்கு உணவாக சிகரெட் துண்டு ஒன்றை ஊட்டுகிறது. அந்த பிஞ்சு பறவையும் அதை முழுங்க முயற்சிக்கிறது.

புளோரிடாவின் லார்கோவைச் சேர்ந்த கரேன் மேசன் என்பவர், கடந்த வாரம் செயின்ட் பீட் கடற்கரையில் குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அதனை இணையத்தில் பதிவேற்றிய அவர், புகைபிடிப்பவர்கள் தயவு செய்து, சிகரெட் துண்டுகளை உரியமுறையில் அப்புறப்படுத்தவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்