ஈரான் அவசரப்பட வேண்டாம்... இல்லையென்றால் அது தான் என் முடிவு! எச்சரிக்கும் டிரம்ப்!

Report Print Santhan in அமெரிக்கா

ஈரானுக்கு காலக்கெடு கொடுக்கவில்ல, அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுத்துவிடாதீர்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.

வல்லரசு நாடுகளுடன் ஈரான் ஏற்படுத்திய அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் இரு நாடுகளுக்கிடயே மோதல் போக்கு உருவாகியுள்ளது.

இதன் காரணமாக இருநாட்டு தலைவர்களும் வார்த்தை போரில் ஈடுபடுவதால், இந்த விவகாரம் நாளுக்கு நாள் முற்றி விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இந்நிலையில் ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மாநாட்டுக்கு மத்தியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் ஈரான் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு டிரம்ப், பிரச்சினைக்கு தீர்வு காண ஈரானுக்கு காலக்கெடு எதுவும் இல்லை. நிறைய அவகாசம் இருக்கிறது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை. ஈரான் விவகாரத்தில் கடந்த 3 நாட்களாக கூறி வருவது தான் எனது நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை. அனைத்தும் சுமுகமாக முடியும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஈரானுடன் போர் செய்ய விரும்பவில்லை, ஒருவேளை போர் ஏற்பட்டால் அது நீண்ட காலம் நீடிக்காது. அமெரிக்கா எளிதில் வென்றுவிடும் என்று டிரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்