150 ஆண்டுகள் வாழ்வதற்காக 100,000 டொலர்கள் செலவிட்ட பிரபலம்: 50இலேயே உயிர் விட்ட பரிதாபம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

பிரபல பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சன் 150 ஆண்டுகள் வாழ்வதற்காக 100,000 டொலர்கள் மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

1984ஆம் ஆண்டு விளம்பரப்படம் ஒன்றில் நடிக்கும்போது தீவிபத்து ஒன்று ஏற்பட்டு மைக்கேல் ஜாக்சனின் முகம் மற்றும் தலையில் தீக்காயங்கள் ஏற்பட்டன.

அப்போது அவர் கலிபோர்னியாவிலுள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தீவிபத்து ஏற்பட்டதற்காக அந்த குளிர்பான நிறுவனம் மைக்கேல் ஜாக்சனுக்கு 1.5 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்கியது.

அவர் அந்த பணத்தை தான் தங்கியிருந்த மருத்துவமனைக்கே நன்கொடையாக கொடுத்து விட்டார்.

அந்த பணத்தில் மருத்துவமனை நிர்வாகம் ஒரு ஆக்சிஜன் சேம்பரை வாங்கியது. அதன் மதிப்பு 100,000 டொலர்கள்.

பின்னர் ஒரு முறை அந்த மருத்துவமனைக்கு சென்றிருந்த மைக்கேல் ஜாக்சன், அந்த கருவிக்குள் படுத்துப் பார்த்தார்.

அவர் அந்த இயந்திரத்திற்குள் படுத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அந்த நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அப்போது மைக்கேல் ஜாக்சன், நானும் இதேபோல் ஒரு இயந்திரத்தை வாங்குவேன், அதில் படுத்து இளமையாகி 150 ஆண்டுகள் வாழ்வேன் என்று கூறினாராம்.

பின்னர் உண்மையாகவே அவர் அந்த மருத்துவமனையை அணுக, அவர் தானம் செய்த அதே இயந்திரத்தை மருத்துவமனை அவருக்கே விற்றதாம்.

அதை தனது வீட்டில் வைத்துக் கொண்டாலும், மைக்கேல் அதற்குள் படுத்து தூங்கவில்லை, ஏனென்றால், அதற்குள் வெகு நேரம் படுத்திருந்தால், உடல் நலம் பாதிக்கும்.

எனவே அவ்வப்போது ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் அவர் அதற்குள் படுத்துக் கொள்வாராம்.

என்றாலும் 150 வயது வரை வாழவேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறவில்லை, மைக்கேல் இறக்கும்போது அவருக்கு வயது 50.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்