வெளிநாட்டில் இந்திய வம்சாவளி மாணவனுக்கு திறமையால் அடித்த அதிர்ஷ்டம்... பரிசு மட்டும் எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா

இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அமெரிக்காவில் நடைபெற்ற வினா விடை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் போர்ட்லேண்ட் நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் அவிகுப்தா. இவர் மொத்தம் 15 பேர் பங்கேற்ற போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

அதில், முதல் 3 இடங்களையும் இந்திய வம்சாவளி மாணவர்களே பிடித்தனர். அவர்களையும் வென்று அவிகுப்தா, தனிநபர் வினா விடை போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதனால் வெற்றி பெற்ற அவருக்கு சுமார் 69 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவில் கடந்த ஆண்டில் நடைபெற்ற, அனைத்து போட்டிகளிலும் இந்திய வம்சாவழி மாணவர்களே வெற்றி பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் அனைத்துப் போட்டிகளிலும் பெரும்பாலான இடங்களை இந்திய வம்சாவழி மாணவர்களே நிரப்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்