வடகொரிய ஜனாதிபதி கிம்மை சந்திக்க தயார்! டிரம்ப் திடீர் அறிவிப்பு

Report Print Kabilan in அமெரிக்கா

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டுள்ளார். இந்த மாநாட்டை முடித்தவுடன் தென்கொரியாவுக்கு டிரம்ப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் உள்ள ஹனோயில், டிரம்ப்-கிம் இருவரும் சந்தித்ததில் இருந்து அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான உறவில் சுமூக நிலை இல்லை. அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இந்நிலையில், வடகொரிய கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க தயாராக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டில் அவர் கூறுகையில், ‘சீன ஜனாதிபதியுடனான சந்திப்பு உட்பட சில முக்கிய சந்திப்புகளுக்கு பிறகு நான் தென் கொரியா செல்ல உள்ளேன். அங்கு செல்லும்போது வடகொரியாவின் ஜனாதிபதி இதை கவனித்தால், எல்லையில் அவரை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Reuters

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்