சொகுசாக வாழ்ந்த மகனுக்கு பணத்தை வாரி இறைத்த கோடீஸ்வர தந்தை.. பின்னர் நடந்த விபரீதம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் ஊதாரிதனமாக சுற்றி கொண்டிருந்த மகன் தனது கோடீஸ்வர தந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

தாமஸ் கிர்பர்ட் சீனியர் என்ற 70 வயது கோடீஸ்வரர் தனது மகன் தாமஸ் ஜூனியருடன் வசித்து வந்தார்.

தாமஸ் ஜூனியர் எந்த வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வந்தார். மகனுக்கு கிர்பர்ட் சீனியர் வாரம் $1,000 பணம் செலவுக்காக கொடுத்து வந்தார்.

இந்நிலையில் மகனின் ஊதாரித்தனத்தை இனியும் பொறுக்க முடியாத கிர்பர்ட் சீனியர் செலவு பணத்தை $300-ஆக குறைத்தார்.

இதனால் தந்தை மீது ஆத்திரம் கொண்ட மகன் கடந்த 2015-ல் கிர்பர்ட் சீனியரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.

இதன் பின்னர் பொலிசார் தாமஸ் ஜூனியரை கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நேற்று நடந்த விசாரணையின் போது, தாமஸ் ஜூனியரின் தாய் மற்றும் வழக்கறிஞர் நீதிபதி முன்னால் பேசினார்கள்.

அப்போது, தாமஸ் ஜூனியர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவரை சிறைக்கு அனுப்புவதற்கு பதிலாக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என கோரினார்கள்.

இதையடுத்து மருத்துவர் ஒருவரும் தாமஸ் ஜூனியர் பல வருடங்களாக மன நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆனாலும் அவர் மீண்டும் சிறையில் தள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை தொடந்து நடக்கவுள்ளது

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்