பெண் பயணியை கடத்திய இந்திய வம்சாவளி உபேர் சாரதி: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த உபேர் சாரதிக்கு, பெண் பயணியை கடத்திய குற்றத்துக்காக 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கை சேர்ந்தவர் 25 வயதான ஹர்பிர் பார்மர். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், உபேர் டாக்சி நிறுவனத்தில் சாரதியாக பணியாற்றி வந்தார்.

கடந்தாண்டு பிப்ரவரியில் நியூயார்க் நகரில் பெண் பயணி ஒருவர் காரில் ஏறினார். அந்த பயணி நியூயார்க்கில் உள்ள வொய்ட் பிளைன்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும்.

ஆனால், அந்த பெண் காரில் ஏறியதும் அயர்ந்து தூங்கி விட்டார். இதை பார்த்த பார்மல், அந்த பெண்ணை இறக்கி விட வேண்டிய இடத்தின் பெயரை உபேரின் மொபைல் ஆப்பில் சென்று, பாஸ்டன் என்று மாற்றி பதிவு செய்தார்.

அந்த பெண் கண் விழித்து பார்த்தபோது கார் வேறு இடத்துக்கு சென்று கொண்டிருப்பதை கண்டார்.

உடனே, தன்னை மீண்டும் வொய்ட் பிளைன்ஸ் அல்லது காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும்படி பார்மரிடம் தெரிவித்தார்.

ஆனால், இதை பொருட்படுத்தாத பார்மர், அவரை ஆள்நாடமாட்டம் இல்லாத இடத்தில் இறக்கி விட்டு சென்றார்.

இது குறித்து அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணையின்போது, பார்மர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்