வானில் இருந்து கீழே மோதி வெடித்து சிதறிய விமானம்... உள்ளிருந்த அனைவரும் பலி!

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று வெடித்து சிதறியதில் உள்ளிருந்த 9 பேரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hawaii மாகாணத்தில் உள்ள Oahu தீவில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை இவ்விபத்து நடந்துள்ளது.

skydivers எனப்படும் வானில் பாராசூட் அணிந்து பறக்கும் வீரர்கள் 9 பேர் சிறிய ரக விமானத்தில் சென்று கொண்டிருந்த போது விமானம் கீழே மோதி வெடித்து சிதறியுள்ளது.

இதில் உள்ளிருந்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் தான் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் இருந்தனர்.

இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரி மேன்யுல் கூறுகையில், நான் Hawaii-ல் 44 வருடங்களாக தீயணைப்பு பணியில் இருக்கிறேன். இதுபோன்ற ஒரு கோர விபத்தை இதுவரை பார்த்ததில்லை என கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் பெயர் மற்றும் இன்னபிற விபரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers