நீங்கள் மோசமான பொருளாதார நிலையில் வாழ வேண்டியிருக்கும் -எச்சரிக்கும் டிரம்ப்

Report Print Abisha in அமெரிக்கா

அமெரிக்காவுக்கு போர் புரிய விருப்பம் இல்லை என்றும், ஆனால் அப்படி போர் ஏற்பட்டால் ஈரான் மொத்தமாக ஒழிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய என்பிசி தொலைக்காட்சிக்கு அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆனால், அணு ஆயுதங்களை உருவாக்க இரானை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதை பற்றி யோசித்தேன். அவர்கள் ஓர் ஆளில்லாத விமானத்தை சுட்டுவீழ்த்தினார்கள், ஆனால் எதிர், தாக்குதல் நடத்த நான் அனுமதி அளித்திருந்தால் அடுத்த அரை மணி நேரத்தில் 150 பேர் உயிரிழந்திருப்பார்கள்" என்று என்பிசியிடம் பேசிய டிரம்ப் கூறினார்.

ஈரான் தாக்குதலுக்கு ஏற்கனவே விமானங்கள் அனுப்பபட்டது என்ற செய்திகளுக்கும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்..

ஈரான் தலைவர்களை குறிப்பிட்டு பேசிய டிரம்ப், "நீங்கள் அணுஆயுதங்களை வைத்திருக்க முடியாது. இதுகுறித்து பேச வேண்டுமானால் பேசலாம். இல்லையென்றால் வரும் காலங்களில் நீங்கள் மோசமான பொருளாதார நிலையில் வாழ வேண்டியிருக்கும்" என்று எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...