அமெரிக்காவில் 8 வயது சிறுவனை இரண்டு வருடமாக கழிவறையில் கட்டிப்போட்டு உறங்கவைத்த பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த டிராவிஸ் மற்றும் கேட்டி ஸ்ட்ராபிரிட்ஜ் என்கிற தம்பதியினர், 8 வயது மகனை 2 வருடமாக கழிவறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
ஆஷ்லே சாவர்ஸ் என்கிற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், அங்கு விரைந்த பொலிஸார் கழிவறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுவனை மீட்டெடுத்தனர்.
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், என்னுடைய 7 குழந்தைகளில் அவன் தான கடைசி மகன். நான் டிராவிஸிடம் இருந்து பிரிந்து சென்றது முதலே என்னை பழிவாங்குவதற்காக மகனை துன்புறுத்தி வந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
பின்னர் சிறுவனிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, என்னுடைய கைகளையும், கால்களையும் கட்டிபோட்டு அடைத்து வைத்திருந்தனர்.
என்னால் நகர கூட முடியாது. ஏறக்குறைய இரண்டு வருடமாக நான் அங்கு தான் உறங்கி கொண்டிருந்தேன். குளிர்காலங்களில் ஒரு சில நாள் மட்டுமே கதவை அடைத்துவிட்டு செல்வார்கள். மற்ற நாட்களில் அந்த குளிரில் நான் பெரும் சிரமத்தை சந்திப்பேன் என கூறியுள்ளான்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மீது சிறுவர் கடத்தல், சிறைவாசம் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட 182 எணிக்கையிலான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.