படுத்த படுக்கையாக கிடந்த இளம் பெண்... 209 கிலோ எடை குறைத்து முதல் முறையாக நடந்தார்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் பெண் ஒருவர் சில வருடங்களுக்கு பிறகு 209 கிலோ எடை குறைத்துள்ளதால், முதல் முறையாக நடந்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் Freeport பகுதியைச் சேர்ந்தவர் Liz Evans. இவரின் நொறுக்கு தீனி பழக்கத்தால் உடல் எடை அதிகரித்தது. இதனால் படுத்த படுக்கையாக கிடந்த இவரின் உடல் எடை அதிகரித்தது.

உடல் எடை அதிகரிப்பால் 327 கிலோ எடை இருந்த இவர் உடல் எடை அறுவை சிகிச்சை மூலமே குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறினர். அதன் படி இவரின் காலில் இருந்த அதிக சதைகள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது.

இதன் மூலம் 158 கிலோ எடை குறைந்தது. அதன் பின் தொடர்ந்து நான்கு மாதங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாகவும் 19 கிலோ என கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 209 கிலோ எடையை குறைத்துள்ளார்.

உடல் எடை அதிகரிப்பின் காரணமாக அவரால் நடக்க முடியவில்லை, இதனால் தவித்து வந்துள்ளார். தற்போது உடல் எடை குறைப்பின் மூலம் முதல் முறையாக எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளார்.

மேலும் அவருக்கு தொடர் அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers