ஈரானுக்கு பதிலடி கொடுக்க டிரம்ப் அதிரடி உத்தரவு... தயாராக இருந்த விமானங்கள்!

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்கா ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய நிலையில் அதற்கு பதிலடியாக இராணுவ தாக்குதலுக்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் வான்வெளியில் ஊடுருவிய அமெரிக்க ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதால், ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டது என்று அமெரிக்கா ஜனாதிபடி டிரம்ப் ஆதங்கமாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஈரான் இராணுவ தளபதி போரை எந்த ஒரு நாட்டினரும் விரும்புவதில்லை எனவும் அப்படி அதையும் மீறி நடந்தால் போருக்கு தயார் என்று கூறியிருந்தார்.

இதனால் இருநாட்டினருக்கிடையே பதற்றமான சுழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த சம்பவத்திற்கு பதிலடியாக ஈரானுக்கு எதிரான இராணுவ தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று ஒப்புதல் அளித்ததாகவும், ஆனால் தாக்குதல் நடத்துவதில் இருந்து சில காரணங்களால் பின்வாங்கப்பட்டது என்று அங்கிருக்கும் ஊள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக இராணுவ விமானம் மற்றும் கப்பல்கல்கள் தயார் நிலையில் இருந்ததாகவும், ஆனால் ஏவுகணைகள் எதுவும் ஏவப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்