கணவர் இறந்து கிடப்பதை பார்த்த அடுத்த நிமிடமே அதிர்ச்சியில் உயிரை விட்ட மனைவி

Report Print Vijay Amburore in அமெரிக்கா

டொமினிக்கன் குடியரசிற்கு சுற்றுலா சென்றிருந்த போது உயிரிழந்த அமெரிக்க தம்பதியினர் வழக்கில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யுமாறு அவருடைய உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் மேரிலாந்தைச் சேர்ந்த சிந்தியா டே மற்றும் நதானியேல் ஹோம்ஸ் என்கிற தம்பதியினர் கடந்த மாதம் டொமினிகன் குடியரசில் சுற்றுலா மேற்கொண்டிருந்தனர்.

அன்றைய தினம் வெளியில் சென்றுவிட்டு ஹோட்டல் அறைக்கு திரும்பிய சிந்தியா தன்னுடைய கணவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்து, அடுத்த நிமிடமே அதிர்ச்சியில் உயிரை விட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார், இறப்பிற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணற ஆரம்பித்தனர்.

அவர்களது அறையில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இரத்த அழுத்த, மனஅழுத்த மருந்துகளை பொலிஸார் கைப்பற்றியதால், சுவாசக் கோளாறு மற்றும் நுரையீரல் வீக்கம் காரணமாக இறந்துள்ளனர் என டொமினிகன் அதிகாரிகள் கூறினர்.

இந்த நிலையில் தம்பதியினரின் உறவினர்கள், மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தியுள்ளதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

முன்னதாக குறித்த ஹோட்டலில் நடப்பாண்டில் மட்டும் 9 அமெரிக்கர்கள் மர்மமான முறையில் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்