அமெரிக்காவில் எந்த நாட்டினர் அதிகம் வசிக்கின்றனர் தெரியுமா? அதில் இலங்கை மக்கள் மட்டும்?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் தெற்காசியர்களின் எண்ணிக்கை குறித்து சவுத் ஆசியன் அமெரிக்கன் லீடிங் டுகெதர் என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது.

ஆய்வின் முடிவில் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,

அமெரிக்காவில் கடந்த 2010-ஆம் ஆண்டு 31.83 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசித்தனர். அதற்கடுத்த 7 ஆண்டுகளில் 38 சதவீதம் அதிகரித்து கடந்த 2017-ஆம் ஆண்டில் சுமார் 44.02 லட்சம் இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் உள்ளனர்.

2016-ஆம் ஆண்டில், சுமார் 2.50 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் விசா முடிந்தும் அமெரிக்காவில் தங்கியுள்ளனர்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற தெற்காசியர்களின் எண்ணிக்கை கடந்த 2010-ஆம் ஆண்டு 35 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்து கடந்த 2017-ஆம் ஆண்டு 54 லட்சமாக உள்ளது.

2010-17 காலகட்டத்தில் நேபாளத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 206.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதற்கடுத்தபடியாக இந்தியர்கள் மற்றும் பூடான் நாட்டைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 38 சதவீதமும், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 33 சதவீதமும், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 26 சதவீதமும், இலங்கையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 15 சதவீதமும் அதிகரித்துள்ளது.

ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரிபவர்களைச் சார்ந்து வாழ அவர்களது மனைவிக்கோ அல்லது கணவருக்கோ ஹெச்-4 விசா வழங்கப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஹெச்-4 விசா பெற்றவர்களில், 86 சதவீதம் பேர் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள்.

அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசியர்களில் சுமார் 5 லட்சம் பேர் வறுமையில் வாழ்கின்றனர். அவர்களில் பாகிஸ்தான்-அமெரிக்கர்கள் அதிக அளவில் வறுமையில் வாழ்கின்றனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் சுமார் 50 லட்சம் ஆசிய-அமெரிக்கர்கள் வாக்களித்துள்ளனர். இதில் 15 லட்சம் பேர் இந்திய வம்சாவளியினர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்