தோழியை வீட்டுக்கு அழைத்து வந்த பெண்: பின்னர் வாழ்வே மாறிப்போன கதை!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனது தோழி ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்தார் ஒரு பெண், பிறகு அந்த தோழி அந்த வீட்டை விட்டுச் செல்லவேயில்லை.

Idahoவைச் சேர்ந்த Kat (29) மற்றும் Justin Taddei (38) என்னும் தம்பதி பத்து ஆண்டுகள் இனிய திருமண வாழ்க்கை மேற்கொண்டிருந்தனர்.

ஒரு நாள் தனது தோழியான Nikki Mattoon (28) என்பவரை தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார் Kat.

அன்று விருந்துக்கு வந்த Nikki அதற்கு பிறகு அந்த வீட்டை விட்டு செல்லவேயில்லை. அவர் அந்த குடும்பத்தின் ஒரு அங்கமாகிவிட்டார்.

Kat, Justin தம்பதியரின் நான்கு பிள்ளைகளுடன் தற்போது மூன்று பேரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு மூவரும் திருமணம் செய்து கொள்ளும் திருமண நிகழ்ச்சி போன்ற ஒன்றை நடத்த மூவரும் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு Kat, Justin தம்பதியரின் பத்தாவது ஆண்டு திருமண வாழ்வு துவங்கும் நிலையில், இந்த திருமண நிகழ்ச்சியை அவர்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அது குறித்து Kat கூறும்போது, அடுத்த ஆண்டுடன் எங்களுக்கு திருமணமாகி பத்தாண்டுகள் ஆகின்றன, Nikki எங்களுடன் இணைந்து ஓராண்டு ஆகிறது.

அது எங்களுக்கு ஏற்கனவே விசேஷமான தருணம், அதே தருணம் Nikkiக்கும் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த நாளை தேர்ந்தெடுத்தோம் என்கிறார்.

மற்றவர்கள் இந்த உறவைக் குறித்து என்ன சொல்கிறார்கள் என்று கேட்டபோது, தான் தங்கள் உறவைக் குறித்து ஒரு செய்தியை பேஸ்புக்கில் பதிவிட்டதாகவும், அதற்கு எல்லோருமே, உங்களுக்கு சந்தோஷம் என்றால் எங்களுக்கும் சந்தோஷம்தான் என்று கருத்து தெரிவித்திருந்ததாகவும் கூறியுள்ளார் Kat.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்