தனது பிள்ளைகளை கொன்ற கணவனுக்கு கருணை காட்ட கோரும் மனைவி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனது ஐந்து குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த கணவனுக்கு கருணை காட்டுமாறு கோரியுள்ளார் மனைவி.

அமெரிக்காவைச் சேர்ந்த Timothy Ray Jones (37), ஒன்று முதல் எட்டு வயது வரையுடைய தனது ஐந்து குழந்தைகளை கொலை செய்தார்.

நீதிபதிகள் குழு ஒன்று அவருக்கு மரண தண்டனை விதிப்பதா அல்லது ஆயுள் தண்டனை விதிப்பதா என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

வழக்கு தொடர்பாக பேசிய குழந்தைகளின் தாயான Amber Kyzer, என்னைப் பொருத்தவரை, ஒரு தாய் என்கிற முறையில் என் குழந்தைகளைக் கொன்ற அவனது முகத்தைக் கிழித்து விடுவேன்.

அவன் என் பிள்ளைகளுக்கு கொஞ்சமும் இரக்கம் காட்டவில்லை, ஆனால் என் குழந்தைகள் அவனை நேசித்தார்கள், அதனால் அவர்கள் சார்பில் நான் அவனுக்கு கருணை காட்டக் கோருகிறேன்.

சட்டப்படி அவனை என்ன வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள், ஆனால் மரண தண்டனை மட்டும் வேண்டாம்.

வாழ்க்கை முழுவதுமே மரண தண்டனையை எதிர்த்தவள் நான், என்று கூறிய Amber Kyzer, இருந்தாலும், நீதிபதிகள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு தலை வணங்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்