அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகரான முதல் தமிழ்ப்பெண்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக சென்னையை சேர்ந்த பிரமிளா ஜெயபால் பொறுப்பேற்றுள்ளார்.

சென்னையை சேர்ந்த பிரமிளா 1982-ம் ஆண்டு தனது 16 வயதில் அமெரிக்காவில் குடியேறினார். அங்கேயே படித்து பட்டம் பெற்ற பிரமிளா சிவில் உரிமை ஆர்வலராக விளங்கி வந்தார்.

மேலும், குடியுரிமை ஆலோசனை மையம் ஒன்றினை துவங்கி பல்வேறு சேவைகள் செய்து வந்தார்.

அதன்பின்னர் 2015ம் ஆண்டு வாஷிங்டன் நகரில் போட்டியிட்டு பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஆனார். இதன்மூலம் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண் என்கிற சாதனை படைத்தார்.

இந்த நிலையில் ஜனநாயக கட்சியினரிடம் செல்வாக்கு பெற்றிருந்த பிரமிளா நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இன்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக நான் பொறுப்பேற்றுள்ளேன். இதன்மூலம் முதல் தெற்காசிய பெண் என்கிற பெருமை பெற்றுள்ளேன்.

நமது நாட்டின் வரலாற்றில் மிகவும் மதிப்புக்குரிய இந்த பொறுப்பை ஏற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்