விமானத்தில் சிறுவன் இருக்கை மீது கால் நீட்டிய இளம்பெண்! அதற்கு அவன் என்ன செய்தான் தெரியுமா? வைரலான வீடியோ

Report Print Raju Raju in அமெரிக்கா

விமானத்தில் தந்தையுடன் பயணித்த 4 வயது சிறுவன் இருக்கையில் அமர்ந்தபடி செய்த செயலின் வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் ஹுவுஸ்டலில் இருந்து ப்ளோரிடா நோக்கி பயணிகள் விமானம் ஒன்று கிளம்ப தயாராக இருந்தது.

விமானத்தில் டேரில் ஸ்மால் என்பவர் தனது மகன் ரோட்னே (4) உடன் பயணித்தார்.

சிறுவன் ரோட்னே அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் உள்ள இருக்கையில் இளம் பெண்ணொருவர் அமர்ந்திருந்தார்.

அப்போது தனது கால்களை ரோட்னே உட்கார்ந்திருந்த இருக்கையின் மீது அப்பெண் வைத்தார்.

இந்த சிறிய விடயத்தை பெரிய விடயமாக நினைத்த சிறுவன் அருகில் இருந்த தந்தையிடம், அப்பா! அங்கு ஒரு பெண் கால்களை என் சீட்டில் வைக்கிறார் என கூறினான்.

சிறுவன் அதிர்ச்சியுடன் கூறியதை பார்த்த அவர் தந்தை டேரிலுக்கு சிரிப்பு வந்த நிலையில் பலமாக சிரித்து விட்டார்.

பின்னர் சிறுவன் அந்த பெண்ணிடம், என்னை நோக்கி ஏன் உங்கள் கால்களை நீட்டுகிறீர்கள் என மழலை மொழியில் கேட்டான்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. சிறுவனின் வெகுளிதனமான முகபாவனை அனைவரையும் கவர்ந்துள்ளது.

டுவிட்டரில் இந்த வீடியோ 44000 லைக்ஸ்களை அள்ளியுள்ளதோடு, 12000க்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்