14 மாகாணங்கள்... மொத்தம் 60 கொலைகள்: அமெரிக்காவை உலுக்கிய கொலைகாரனின் ஒப்புதல் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த சாமுவேல் லிட்டில் என்பவர், தாம் இதுவரை 60 பேரை கொலை செய்துள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சாமுவேல் லிட்டில், கடந்த 1970 முதல் 2005 வரையான காலகட்டத்தில், புளோரிடா முதல் கலிபோர்னியா வரையான 14 மாகாணங்களில் இந்த கொலைகளை செய்துள்ளார்.

இவர் கைதான பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தாம் 34 பேரை கொலை செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

79 வயதாகும் லிட்டில் தற்போது கலிபோர்னியா மாகாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை இவர் மீதான மூன்று வழக்குகள் மட்டுமே நிரூபணமாகியுள்ளதால், நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், லிட்டில் விசாரணையை முன்னெடுக்கும் அனைத்து மாகாணங்களுக்கும் ஒத்துழைப்பு தருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது ஒகையோவில் உள்ள ஹாமில்டன் கவுண்டியில் 1980 ஆம் ஆண்டு இரு பெண்களை கொலை செய்த குற்றச்சாட்டிலும்,

1984 ஆம் ஆண்டு 21 வயது இளம்பெண்ணை கடத்திய குற்றத்திற்காகவும், 1994 ஆம் ஆண்டு எக்டார் கவுண்டியில் நடந்த கொலை சம்பவம் தொடர்பிலும் தண்டனை அனுபவித்து வருகிறார்.

தற்போது விசாரணை அதிகாரிகள் சாமுவேல் லிட்டில் கொலை செய்ததாக குறிப்பிட்டுள்ள பெண்களின் வரைபடங்களை வெளியிட்டு பொதுமக்களிடம் இருந்து உதவி கோரியுள்ளனர்.

விசாரணை அதிகாரிகளிடம் லிட்டில் அளித்த வாக்குமூலத்தில், அமெரிக்கா முழுவதும் பெரும்பாலான மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக 90 கொலைகள் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த கொலைகள் தொடர்பில் போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை எனவும், விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்