நொறுக்கு தீனியால் கிடைத்த அதிர்ஷ்டம்: லொட்டரியில் 344 மில்லியன் டொலர்களை வென்ற நபர்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தை சேர்ந்தவர் 66 வயதான ஜாக்சன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தன்னுடைய பேத்தியுடன் உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவருடைய பேத்தி Fortune cookie பாக்கெட் ஒன்றினை வாங்கி ஜாக்சனிடம் கொடுத்துள்ளார். அதனை பிரித்த ஜாக்சன், உள்ளே பரிசுத்தொகைக்கான எண்களை இருப்பதை பார்த்து பத்திரமாக வைத்திருந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை எழுந்ததும், அந்த எண்களை சரி பார்த்துள்ளார். முதல் தடவை தெளிவாக எண்களை சரிபார்க்காததால், 50000 டொலர்கள் மட்டுமே வெற்றி பெற்றிருப்பதாக காண்பித்துள்ளது.

உடனே தன்னுடைய மனைவியை அழைத்து ஒரு நல்ல செய்தி இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். உண்மையான பரிசுத்தொகை என்னவென்பது தெரியாததால், மீண்டும் ஒரு முறை கூகுளில் தேடி பார்த்துள்ளனர்.

அப்போது முழு பரிசுத்தொகையான 344 மில்லியன் டொலர்களை வென்றிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே ராலே நகரத்திற்கு விரைந்து சென்று தன்னுடைய பரிசுத்தொகையை பெற்றுள்ளார்.

ஜாக்சன் தனது லாட்டரி பரிசுத்தொகையில் ஒரு பெரிய வரி மசோதாவை எதிர்கொள்கிறார். 24 சதவிகிதம் கூட்டாட்சி வரி வசூலையும், 5.5 சதவிகித மாநில வரி விகிதத்தையும் எதிர்கொள்கிறார். மாநில மற்றும் மத்திய வரிகளுக்கு பிறகு சுமார் 158 மில்லியன் டொலர்களை பெறுகிறார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்சன், இந்த பரிசுத்தொகையில் ஒரு பகுதியை ஆதரவில்லாத குழந்தைகள் மற்றும் காயாமடைந்திருக்கும் போர் வீரர்களுக்கு நன்கொடையாக அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய சகோதர்கள் இருவருக்கும் ஆளுக்கொரு மில்லியன் பணத்தை கொடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்