ரகசியமாக தம்பியுடன் வாழ்க்கை நடத்திய அக்கா: பத்து ஆண்டுகளுக்குப்பின் கொடுத்த விளக்கம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தனது தம்பியுடன் ரகசிய வாழ்க்கை நடத்திய ஒரு அக்கா பத்து ஆண்டுகளுக்குப்பின் உறவினர்களிடம் உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ப்ளோரிடாவைச் சேர்ந்த Debby Zutant (51), தனது தம்பியான Joe (38)வுடன் 15 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்ததற்கு பிறகு சட்டப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தத்துக் கொடுக்கப்பட்டிருந்த Debby, 35 வயதானபோது தனது உண்மையான பெற்றோரைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார்.

அப்போது அவரது தந்தை தனக்கு இன்னொரு மகன் இருப்பதாக தெரிவித்து அவரது புகைப்படத்தைக் கொடுத்துள்ளார்.

Joe என்ற அந்த நபரை நேரில் பார்த்ததும் அவர் மீது ஒருவித ஈர்ப்பு தோன்றியதாக தெரிவிக்கும் Debby, பின்னர் ஒருமுறை அவரை சந்திக்கும்போது, அவருக்கும் தன் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டதாக அவரே கூற, தங்களுக்கு Genetic Sexual Attraction (GSA) என்னும் பிரச்சினை இருப்பதாக தெரிய வந்ததாக தெரிவிக்கிறார்.

GSA என்பது ஒருவரது தூரத்து உறவினர்கள் மீது அவருக்கு காதல் ஏற்படும் ஒருவித பிரச்சினை ஆகும்.

இரண்டாவது முறை சந்திக்கும்போதே உடல் ரீதியாக தாங்கள் இணைந்ததாகவும், அதில் தங்களுக்கு எவ்வித குற்ற உணர்ச்சியும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கிறார் Debby.

அப்போதிலிருந்தே சேர்ந்து வாழத்துவங்கினாலும், உலகம் தங்கள் உறவைக் குறித்து என்ன சொல்லும் என்று பயந்து வெளியே சொல்லாமலே 10 ஆண்டுகள் ரகசியமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

கடைசியாக 15 ஆண்டுகளுக்குப்பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சட்டப்படி திருமணம் செய்து கொண்டுள்ளது இந்த ஜோடி.

அமெரிக்காவில் இரத்த சம்பந்தம் உள்ளவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்றாலும், இருவரது பெயரிலும் தந்தையின் பெயர் வெவ்வேறாக உள்ளதால் தங்களுக்கு பிரச்சினை ஏற்படவில்லை என்கிறது இந்த ஜோடி.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்