உங்களுடன் ஒன்றிணைந்து பணியாற்ற எதிர்நோக்கியுள்ளேன்: மோடிக்கு வாழ்த்து தெரிவித்த டிரம்ப்

Report Print Kabilan in அமெரிக்கா

நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மாபெரும் வெற்றியைப் பெற்று 2வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.

பா.ஜ.க கூட்டணி 325க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, உலக தலைவர்கள் விளாடிமிர் புதின், இம்ரான் கான், ஜி ஜிங்பிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் தனது வாழ்த்தினை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘இந்த மிகப்பெரிய தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கும், அவரது கட்சிக்கும் வாழ்த்துக்கள். நமது முக்கிய பணிகளை உங்களுடன் ஒன்றிணைந்து செய்வதற்கு எதிர்நோக்கி உள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்