வெளிநாட்டில் 2 குழந்தைகளை காருடன் கடத்திய இந்தியருக்கு நேர்ந்த கதி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் 2 குழந்தையுடன் காரை கடத்த முயன்ற இந்தியர் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

குறித்த சம்பவத்தை தடுக்க முயன்ற மூதாட்டிக்கு காயம் ஏற்பட்டது.

அமெரிக்காவில் ஒகியோ அருகே உள்ள மருத்துவமனைக்கு நிதா கோபன் (69) என்ற மூதாட்டி கடந்த 25 ஆம் திகதி மற்றொரு மூதாட்டியை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக சென்றுள்ளார்.

அவர்களுடன் கோபன் தனது 8 வயது பேரனையும், 10 வயது பேத்தியையும் காரில் அழைத்து சென்றுள்ளார். பின் சீட்டில் பேரன் பேத்திகள் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.

அவசர சிகிச்சை பிரிவில் அந்த மூதாட்டியை அனுமதித்து விட்டு காருக்கு திரும்பியபோது தனது காரின் ஓட்டுனர் இருக்கையில் மர்ம நபர் ஒருவர் இருப்பதை கண்டு நிதா அதிர்ச்சி அடைந்தார். அப்போது காரை மறித்து அதில் இருந்த தனது பேரக்குழந்தைகளை மீட்க முயன்றுள்ளார்.

ஆனால், மறுகதவு வழியாக குழந்தைகள் இருவரும் சாமர்த்தியாக வெளியே குதித்து தப்பித்துவிட்டனர்.

இதனிடையே மர்மநபர் வேகமாக காரை எடுக்கவே, தன் பேரன் பேத்தியை மர்மநபர் கடத்தி செல்வதாக கருதி காரில் மூதாட்டி தொங்கியபடி சென்றார்.

இதை கண்காணிப்பு கமெராவில் பார்த்து பொலிசார் காரை மடக்கி அவனை கைது செய்தனர்.

அப்போது காரை திருட முயன்றவன் இந்தியாவை சேர்ந்த தல்வீர் சிங் என்பதும், போதை ஆசாமியான அவன் குழந்தைகளையும் காரையும் கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்