சாலையில் சென்ற கார்களின் மீது அறுந்து விழுந்த கிரேன்! 4 பேர் பலியான பரிதாபம்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவின் சியாட்டில் நகரில், சாலையில் சென்ற வாகனங்களின் மீது பளுதூக்கி கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டனின் புறநகர் பகுதியான டவுண்ட்டவுன் சியாட்டில் நகரில், நேற்றைய தினம் 5வது நெடுஞ்சாலை வழியாக வழக்கம் போல் வாகனங்கள் விரைவாக சென்று கொண்டிருந்தன.

மெர்கெர் தெரு மற்றும் பேர்வியூ ஆகிய பகுதிகளுக்கு இடையில், கட்டுமானத்துக்கு பயன்படும் பளுதூக்கி கிரேனை சுமந்து வாகனம் ஒன்று சென்றது.

அப்போது திடீரென பளுதூக்கி கிரேன் அறுந்து விழுந்தது. அங்கு சென்ற கார்களின் மீது பயங்கர சப்தத்துடன் இந்த கிரேன் விழுந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

மேலும் காயமடைந்த 8 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் மொத்தம் 6 கார்கள் நசுங்கின. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Jill Gardner

Alan Berner/AP

Joshua Bessex/AP

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...