அமெரிக்க நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து, ஏராளமானோர் பலி: பற்றியெரியும் வாகனங்களால் போக்குவரத்து நிறுத்தம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

கட்டுப்பாட்டை இழந்த ட்ரக் ஒன்று ஏற்கனவே விபத்துக்குள்ளாகி நின்ற பள்ளிப் பேருந்து மற்றும் கார்கள் மீது மோதி அமெரிக்க நெடுஞ்சாலை ஒன்றில் ஏற்படுத்திய பயங்கர விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதோடு சுமார் 10 பேர் காயமடைந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டென்வருக்கு அருகேயுள்ள நெடுஞ்சாலை 70 இல் ஒரு பள்ளிப் பேருந்தும் சில கார்களும் மோதி சிறு விபத்தொன்று ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.

சிறு காயங்களுடன் மாணவர்கள் தப்ப, சிலர் மட்டும் மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காத்திருந்த ஒரு வாகன ஓட்டி தன்னை தாண்டி மிக வேகமாக செல்லும் ட்ரக் ஒன்றின் வேகத்தால் அதிர்ச்சியடைகிறார்.

அவரது காரிலுள்ள கெமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.

அவர் தனது கெமராவை வெளி நோக்கி திருப்பி, தன்னை தாண்டிச் சென்ற அந்த ட்ரக்கை காட்டும் அந்த சில நொடிகளில், அந்த ட்ரக் ஏற்கனவே நின்று கொண்டிருந்த பள்ளிப்பேருந்து மற்றும் சில கார்கள் மீது சென்று மோதி கரும்புகை வருவது தெரிகிறது.

அடுத்த சில நிமிடங்களில் வாகனங்களில் உள்ள எரிபொருள் தீப்பற்ற, இன்னொரு வாகனத்தில் உள்ள மரக்கட்டைகளும் சேர்ந்து கொள்ள, தீ பயங்கரமாக பற்றி எரியத் தொடர்கிறது.

தீப்பற்றி எரியும் இடத்தில் பாலம் ஒன்றும் இருந்ததால் தீயில் அந்த பாலம் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சாலை மூடப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள படங்கள் தீயின் கோர முகத்தை தெளிவாகக் காட்டுகின்றன. இந்த மோசமான விபத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதோடு சுமார் 10 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

தீயில் எரிந்து மூன்று ட்ரக்குகள் மற்றும் 12 கார்கள் முற்றிலும் நாசமாகி விட்டன.

இந்த துயர சம்பவம் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்