மாமிசம் அரைக்கும் ராட்சத இயந்திரத்திற்குள் விழுந்த இளம்பெண் பலி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் மாமிசம் அரைக்கும் ராட்சத இயந்திரம் ஒன்றிற்குள் விழுந்த இளம்பெண் ஒருவர் பரிதாபமாக பலியாகியிருக்கிறார்.

பெனிசில்வேனியாவிலிருக்கும் அந்த மாமிசம் அரைக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த Jill Greninger (35) என்ற பெண், நகரும் ஏணி ஒன்றின் மீது நின்று கொண்டிருக்கும்போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது.

ஏணி நகர்ந்ததாலோ என்னவோ அவர் தவறி இயந்திரத்திற்குள் விழுந்திருக்கிறார். அவர் விழுந்ததை யாரும் பார்க்கவில்லை என்றாலும், விழுந்த சத்தம் கேட்ட Greningerஇன் சக ஊழியர் ஒருவர் விரைந்து சென்று பார்க்கும்போது Greningerஇன் உடல் இயந்திரத்திற்குள் சிக்கியிருப்பதைக் கண்டிருக்கிறார்.

உடனடியாக அவர் உதவி கோரி அழைக்க, உதவிக் குழுவினர் வந்து பார்க்கும்போது ஏற்கனவே Greninger உயிரிழந்திருக்கிறார்.

அந்த மாமிசம் அரைக்கும் இயந்திரத்தை பிரித்து Greningerஇன் உடலை மீட்டெடுப்பதற்கு தீயணைப்பு வீரர்களுக்கு 45 நிமிடங்கள் பிடித்திருக்கிறது.

பல ஆண்டுகளாக இயங்கி வரும் அந்த தொழிற்சாலையில் இதுவரை இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்ததில்லை என்கிறார்கள் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers