இலங்கை குண்டு வெடிப்பில் பரிதாபமாக இறந்த 11 வயது சிறுவன்.. மனைவியை எப்படி தேற்றுவேன் என கண்ணீர் விடும் வெளிநாட்டு தந்தை

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த 11 வயது சிறுவன் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில், அந்த சிறுவனின் தந்தை மனைவியை என்ன சொல்லி தேற்றுவேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தால் 359 பேர் பரிதாபமாக இறந்தனர். இதில் இறந்தவர்கள் பற்றிய தகவல் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த Kieran Shafritz de Zoysa என்ற 11 வயது சிறுவன் உயிரிழந்தான்

ஆறாம் கிரேடு படிக்கும் அந்தச் சிறுவன் தன் கோடை விடுமுறையைச் சிறப்பாக கழிக்க தன் தாயுடன் இலங்கை சென்றுள்ளான்.

அப்போது சம்பவ தினத்தன்று கொழும்புவில் இருக்கும் சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் உணவருந்த அவனும் அவனது தாயும் சென்ற போது குண்டு வெடித்துள்ளது.

இதில் சிறுவன் கிரண் உயிரிழந்த நிலையில், அவனது தாய் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மகனை பறிகொடுத்த தந்தை அலெக்ஸ் ஆரோ இந்த சம்பவம் குறித்து கூறுகையில்,

அவன் எங்களுக்கு ஒரே பிள்ளை. மிகவும் புத்திசாலி. தன் கோடை விடுமுறையை இன்பமாக கழிக்க அவன் இலங்கை சென்றான்.

இலங்கையிலிருந்து அவன் திரும்பி வந்திருந்தால் கிரண் ஏழாம் கிரேடு சென்றிருப்பான். அவனுக்கு தான் ஒரு நரம்பியல் நிபுணராக வேண்டும் என்பதுதான் ஆசை. அவன் யாரையும் நம்பி இருக்கமாட்டான். தன் சுய முயற்சியின் மூலமே அனைத்துச் செயல்களையும் செய்து முடிப்பான்.

அவனுக்கு அனைத்து நாடுகளுக்கும் செல்ல வேண்டும் என்பது தான் ஆசை, இது வரை ஐந்து நாடுகளுக்கு சென்றுள்ளான்.

அவனுக்கு சைனீஸ், சிங்களம், மண்டாரின் ( சீனாவில் பேசும் வேறு ஒரு மொழி) ஆகிய மூன்று மொழிகள் தெரியும்.

அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட பிறகு விமானத்தில் இருக்கும் போது தான் அவனும், மனைவியும் என்னிடம் பேசினர்.

என் மனைவிக்கு, மகன் தான் எல்லாமே, அவன் தான் உலகம் பிள்ளைக்காக தன் வாழ்வையும் அவள் அர்ப்பணித்திருந்தாள்.

அவனின் ஆசைகளை நிறைவேற்ற அவள் எதுவும் செய்ய தயாராக இருந்தாள். இப்போது கிரண் இல்லை, என் மனைவிக்கு நான் எவ்வாறு தேற்றுவேன் எனத் தெரியவில்லை.

தீவிரவாதிகள் தாங்கள் யாரை கொல்கிறோம் என அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் அதை தெரிந்துகொள்ள வேண்டும். தீவிரவாதிகள் மனதில் என்ன நினைத்துள்ளார்கள் எனத் தெரியவில்லை.

ஆனால், அவர்கள் ஒரு நொடியில் என் மொத்த வாழ்வையும் என்னிடமிருந்து பறித்துவிட்டார்கள். தாங்கள் என்ன செய்கிறோம் எனத் தெரியாமலேயே அவர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கதறி அழுதார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers